“டச்” தட்டச்சு பயிற்சிக்கு வருக!

நீங்கள் உங்கள் விசைப்பலகையில் இரண்டு விரல்களை மட்டுமே பயன்படுத்தி தட்டச்சு செய்து கொண்டிருக்கிறீர்களா? அல்லது ஒவ்வொரு எழுத்தையும் தட்டுவதற்கு விசைப்பலகையை பார்க்க வேண்டியிருக்கிறதா?
“டச்” தட்டச்சு பயிற்சிதளம் ஒரு இலவச, பயனருக்கு நட்பான கற்றல் வலைத்தளமமாகும். தட்டச்சு கற்பதற்கும், பயிற்சி பெறவும், துல்லியமாகவும் வேகமாகவும் தட்டச்சு செய்ய இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
நீங்கள் இதில் பயிற்சியடைந்தால் தட்டச்சு செய்யும்போது எழுத்துககளை கண்டுபிடிக்க விசைப்பலகையைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. மேலும் நீங்கள் மிக விரைவாக தட்டச்சு செய்ய முடியும்!
டச் தட்டச்சு பயிற்சிதளமானது காட்சி நினைவாற்றலை அடிப்படையாகக் கொள்ளாமல் உங்கள் தசைகளின் நினைவாற்றலை அடிப்படையாகக் கொண்டது. இந்த முறையில் நீங்கள் வெகு விரைவாக தரவுப்பதிவு செய்ய முடியும். குறிப்பாக கண்ணால் பார்த்த விபரங்களை விரைவாக எடுத்தெழுத இது பேருதவி புரியும்.
“டச்” தட்டச்சு முறையில் தட்டச்சு உங்கள் கணினியின் உற்பத்தித் திறனை கணிசமாக அதிகரிக்கிறது; அது தரவுப பதிவு வேகத்தை அதிகரிக்கிறது, மற்றும் கண்களுக்கு சோர்வு மற்றும் பாதிப்பைக் குறைக்கிறது.
“டச்” தட்டச்சு பயிற்சியில் 15 பாடங்களும் ஒரு விளையாட்டும், உங்கள் தட்டச்சு வேகத்திற்கான ஒரு சோதனைத் தேர்வும் உள்ளன. நீங்கள் இதன் மூலம் படிப் படியாக தட்டச்சு கற்றுக்கொள்வதற்கும் உங்கள் முன்னேற்றத்தை நீங்களே கண்காணித்துக் கொள்ளவும் விளையாடி மகிழவும் முடியும்.

விசைப்பலகை அமைப்பு